அவுஸ்திரேலிய தலைநகரம் கன்பராவில் 19.03.2014 செவ்வாய்க் கிழமை அன்று மதியம் 12.00 தொடக்கம் 2.00 மணிவரை பாராளுமன்றத்திற்கு முன்பாக சிட்னி, மெல்பேன், கன்பெரா மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடி ஐ.நா வில் மனித உரிமை சபையில் எடுக்கப்போகின்ற தீர்மானத்தில் போர்குற்றங்கள், மனிதஉரிமை மீறல்கள், இனஅழிப்பு ஆகியவற்றுக்கு சுயாதீன விசாரணைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அவுஸ்திரேலியா அரசாங்கம் இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை தாங்கியவாறு மாபெரும் பேரணிஒன்றை நடத்தினார்கள்.
இதேநேரத்தில் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 26 நாடுகளின் தூதரகங்களுக்கு சென்று மேற்கூறிய கோரிக்கைகளை கையளித்து அவர்களின் ஆதரவை வேண்டி மனுக்கள் கையளிக்கப்ட்டன.
இந்த பேரணியின்போது அவுஸ்திரேலிய, பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு, எமது கோரிக்கைகளை ஆதரித்து , MP’s Philip Ruddock, Craig Laundy, & Craig Kelly of the Liberal Party, Michelle Rowland of the Labour Party, Christine Milne & Lee Rhiannon of the Greens Party & John Madigan of the Democratic Labour Party உரைநிகழ்த்தினார்கள்.
அதனைதொடர்ந்து அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் உணர்வுகளை வெளிப்டுத்தியவாறு கோசங்கள் எழுப்பி ஊர்வலமாக பிரித்தானிய, கனடா, அமெரிக்கா, இந்தியா, சவுத்ஆபிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய தூதரகங்களுக்கு சென்று மனுக்களை உயர்ஸ்தானிகர்களோடு கலந்துரையாடி கையளித்தினர்.
இறுதியில் தமிழீழம் கிடைக்கும்வரை உறுதியுடன் எமது போராட்டங்களை ஓய்வின்றி தொடருவோம் என்ற உறுதி மொழியுடன் பேரணி நிறைவுபெற்றது.
0 Comments:
Post a Comment