நடுவானில் காணாமல் போன மலேசிய விமானத்தின் சிதைவுகள் எனக் கருதப்படும் இரு பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபேட் அறிவித்துள்ளார்.
இந்தப் பொருட்கள் செய்மதி படங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றை சரியாக கண்டுபிடிப்பதற்கு ஒரியன் ரக விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அபேட் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மலேசியன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் ரக விமானம் கடந்த எட்டாம் திகதி 239 பேருடன் காணாமல் போயிருந்தது. அது மலேசிய தலைநகரிலிருந்து சீனத் தலைநகர் நோக்கி பறந்து கொண்டிருந்த சமயம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகளை இழந்திருந்தது.
அவுஸ்திரேலிய சமூத்திரவியல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விமானத்தின் சிதைகவுகள் என கருதப்படும் பொருட்கள் இனங்காணப்பட்டதாக அவுஸ்திரேலிய பிரதம மந்திரி தெரிவித்தார். இவற்றை சரியான கண்டறிவது மிகவும் சிரமமான காரியம். இவை மறைந்த விமானத்துடன் தொடர்புகள் இல்லாதவையாகவும் இருககக்கூடுமென அவர் கூறியதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment