நடுவானில் காணாமல்போன மலேசிய விமானத்தின் தலைமை விமானி பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமானியின் வீட்டில் இருந்த ஸ்ரிமியூலேற்றர் கருவியில் இருந்து சில கோப்புக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக விசாரணை உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளார்கள்.
தலைமை விமானி ஷஹாரி அஹமட் ஷா தாம் வீட்டில் இருக்கும் சமயத்தில் கணினிகள் மூலம் விமானத்திற்கு சமமான பின்னணியை உருவாக்கும் ஸ்ரிமியூலேற்றர் திரையின் முன்னால் இருந்து கொண்டு பயிற்சி பெறுவது வழக்கமாக இருந்தது. அந்தக் கருவியில் இருந்து அழிக்கப்பட்ட கோப்புக்களை மீளப்பெறும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் அஹமத் சஹீத் ஹமீதி தெரிவித்தார்.
தலைமை விமானி ஷாவின் ஸ்ரிமியூலேற்றர் கருவியில் இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளின் ஓடுபாதைகளில் விமானத்தைத் தரையிறக்குவது தொடர்பாக பயிற்சி அளிக்கும் மென்பொருட்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவியில் இருந்து அளிக்கப்பட்ட கோப்புக்களை மீளப் பெறும் முயற்சியில் அமெரிக்காவின் எவ்பீஐ புலனாய்வு நிறுவனமும் உதவி செய்கிறது.
0 Comments:
Post a Comment