சவுதி தலைநகரின் வீதிகளில் பல தசாப்த காலம் பிச்சை எடுத்து வாழ்ந்த 100 வயது மூதாட்டி உயிரிழந்திருக்கிறார். இவர் விட்டுச் சென்ற சொத்தின் பெறுமதி அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
தங்கக்காசுகள், ஆபரணங்கள் போன்றவை மட்டுமல்லாது, இந்தப் பாட்டிக்கு பெரும் குடியிருப்பு மனைத் தொகுதியொன்றும் இருந்திருக்கிறது. இவற்றின் மொத்தப் பெறுமதி மூன்று மில்லியன் றியால்களாகும். இலங்கை நாணயத்தின்படி இது 10 கோடியை தாண்டுகிறது.
இந்த சொத்து விபரம் ஜித்தா நகர மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இந்தப் பெண் சிறுவயதில் இருந்து காசு சேர்த்ததாக அவரது பால்ய கால நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமக்கு சொந்தமான குடியிருப்புமனைத் தொகுதியில் வாழ்ந்த குடும்பங்களிடம் இருந்து மூதாட்டி ஒருபோதும் வாடகை அறவிட்டதில்லை எனவும் நண்பர் கூறினார்.
0 Comments:
Post a Comment