உக்ரேனின் சர்ச்சைக்குரிய கிரைமியா பிராந்தியத்தை தம்மோடு இணைத்த ரஷ்யாவிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.
கிரைமியாவை ரஷ்யாவின் ஒரு பாகமாக மாற்றக்கூடிய உடன்படிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி விளாத்திமிர் புட்டின் கைச்சாத்திட்டதை அடுத்து, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தடை குறித் அறிவித்தலை மேற்கொண்டார்.
இதன் பிரகாரம், அவுஸ்திரேலிய அரசாங்கம் உக்ரேனின் இறையாண்மைக்கு ரஷ்யா அச்சுறுத்தல் விடுக்க முக்கியமான காரணமாக அமைந்த நபர்கள் மீது நிதி மற்றும் பயணத் தடைகளை விதிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பிஷொப் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ரஷ்யாவின் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
யார் மீது தடைகள் விதிக்கப்படும் என்ற விபரங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிக்கவில்லை.
இவ்வார முற்பகுதியில் உக்ரேன் – ரஷ்யா விவகாரத்துடன் தொடர்புடைய 11முக்கியஸ்தர்கள் மீதான தடைகள் பற்றி அமெரிக்கா அறிவித்திருந்தது. ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய சகாக்கள் அடங்கலாக முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, அவர்கள் மீது பயணத்தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.
0 Comments:
Post a Comment