இந்தியாவில் கடந்தாண்டு புகைப்பட நிருபர் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுக்களை மும்பை நீதிமன்றம் ஊர்ஜீதம் செய்துள்ளது.
கூட்டான பாலியல் வல்லுறவு, இயற்கைக்கு மாறான புணர்ச்சி, சாட்சியங்களை நிர்மூலமாக்குதல் உள்ளிட்ட ஐந்து குற்றங்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டார்கள். இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் செய்தி சேகரிப்பதற்காக சென்ற 22 வயது பெண்மணி பாழடைந்த தொழிற்சாலையில் ஐந்து ஆண்களால் இம்சைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் 18 வயதாக இருந்த ஐந்தாவது சந்தேகநபர் சிறுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளார்.
0 Comments:
Post a Comment