பாகிஸ்தான் பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப்பின் வாசஸ்தலத்தில் அவர் வளர்த்த மயிலுக்கு பூனை எமனானதைத் தொடர்ந்து மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்த மயில் வாசஸ்தலத்தின் முற்றத்தில் இறந்து கிடந்ததை தோட்டக்காரர் கண்டிருக்கிறார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் கடமையிலிருந்த 21 காஸ்டபிள்களிடம் விளக்கம் கோரப்பட்டதாகவும், அவர்களில் மூவர் இடைநிறுத்தப்பட்டதாகவும் பாகிஸ்தானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. கடமையில் அசிரத்தையாக இருந்தார்கள் என்பது அவர்கள் மீதான குற்றச்சாட்டெனத் தெரிகிறது.
தாம் இரவு நேரத்தில் காவல் கடமையில் இருந்ததாகவும், ஒரு பூனை மயிலை சாப்பிடும் என கனவிலும் நினைக்கவில்லை என்றும் இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கூறினார்.
0 Comments:
Post a Comment