இந்துமா சமுத்திரத்தின் தென்பகுதியில் தென்பட்ட இரு பொருட்களை ஆதாரமாகக் கொண்டு, நடுவானில் மறைந்த மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இந்த விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் நான்கு இராணுவ விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நேற்று கிடைத்த செய்மதிப் படங்களில், மறைந்த விமானத்தின் சிதைவுகளாகக் கருதப்படும் இரு பொருட்கள் தென்பட்டிருந்தன.
இந்தப் பொருட்களை கண்டறிவதற்காக நேற்று தீவிர தேடுதல் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், சீரற்ற காலநிலை காரணமாக எதுவித பலனும் கிட்டவில்லை. இதன் காரணமாக, இரவு நேரத்தில் தேடுதல் பணிகள் கைவிடப்பட்டிருந்தன.
இன்று அவுஸ்திரேலிய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு ஓரியன் விமானங்கள் அடங்கலாக நான்கு விமானங்கள் தேடுதல் பணியை ஆரம்பித்துள்ளதாக அவுஸ்திரேலிய சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்த விமானங்களுடன் பல வணிகக் கப்பல்களும் இணையவிருப்பதாகத் தெரிகிறது.
இவை பேர்த் நகரில் இருந்து சுமார் 2,500 கிலோமீற்றர் தொலைவிலுள்ள 23,000 கிலோமீற்றர் விஸ்தீரணமான கடற்பரப்பில் தேடுதல் பணியில் ஈடுபடுமென பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த 8ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி 239 பேருடன் பயணித்த சமயம், எம்எச்-370 ரக விமானம் ராடார் திரைகளில் இருந்து மறைந்திருந்தது.
0 Comments:
Post a Comment