அவுஸ்திரேலிய பிரதம மந்திரி ரோனி அபொட் நேற்று பப்புவா நியூ கினியாவிற்கு விஜயம் செய்திருக்கிறார்.
பிரதமர் என்ற வகையில், பப்புவா நியூ கினியாவிற்கு திரு.அபொட் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
பிரதம மந்திரி பீற்றர் ஓ. நீல் அவர்களின் அழைப்பை பப்புவா நியூ கினியாவிற்கு விஜயம் செய்யும் ரோனி அபொட், பொருளாதார விடயங்கள் மீது கவனம் செலுத்துவார்.
இரு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, உட்கட்டமைப்பு வசதிகள் முதலான விடயங்கள் பற்றி பேசுவதை விரும்பக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறேனும், அவுஸ்திரேலிய பிரதமர் சர்ச்சைக்குரிய மானுஸ் தீவு தடுப்பு முகாமிற்கு செல்ல மாட்டாரெனத் தெரிவதாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தடுப்பு முகாமில் மூண்ட கலவரத்தின் விளைவால், கடந்த மாதம் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தார்கள். இந்தப் பிரச்சனை உலக அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது. அத்துடன், அவுஸ்திரேலியாவிற்கும் பப்புவா நியூ கினியாவிற்கும் இடையிலான உடன்படிக்கைகள் பற்றிய கரிசனைகளுக்கும் வித்திட்டிருந்தது.
0 Comments:
Post a Comment