நடுவானில் மறைந்த மலேசிய விமானம் பற்றிய புதிய தகவலை தாய்லாந்து வெளியிட்டுள்ளது.
மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான MH370 விமானம் தனது பயணத் திசையை மாற்றியதை அடுத்து, அது நிர்ணயிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் செல்வதை தமது இராணுவம் கண்டதாக தாய்லாந்து கூறுகிறது.
பீஜிங் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கி 239 பேருடன் புறப்பட்ட மலேசிய விமானம், நடுவானில் காணாமல் போயிருந்தது. பல கப்பல்களும், விமானங்களும் தென்சீனக் கடற்பரப்பில் ஆர்370 விமானத்தைத் தேடி வருகின்றன.
விமானம் காணாமல் போனதாகக் கூறப்படும் சில நிமிடங்களுக்குள் அது பயணத் திசையை மாற்றிக் கொண்டு தென்மேற்குப் பிரதேசத்தை நோக்கி பறப்பது தாய்லாந்து ராடார் கருவிகளில் பதிவாகியிருக்கிறது.
அந்த சமயத்தில், விமானம் பற்றிய தகவலை மலேசியாவிற்கு அறிவிக்கவில்லை என தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. மலேசியா தகவல் எதனையும் கேட்கவில்லை எனவும் தாய்லாந்து கூறியிருக்கிறது.
சரியான விதத்தில் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்குமானால், விமானத்தை தவறான இடத்தில் தேடுவதில் விளைந்த கால தாமதத்தைத் தவிர்த்திருக்கக்கூடுமென ஏபிசி செய்தி ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
0 Comments:
Post a Comment