.

.

Thursday, March 20, 2014

மகாத்மா காந்தி கொலை: ராகுல் மீது வழக்கு


மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ்.சை சேர்ந்தவர்தான் கொலை செய்தார் என்று கூறிய ராகுல் காந்தி மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகி வழக்கு தொடர்ந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவாண்டியில் கடந்த 6ம் திகதி நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது, தேசப்பிதா மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கொலை செய்ததாக கூறினார். இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராகுல் காந்தி மீது ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிவாண்டி கிளை செயலாளர் ராஜேஷ் குந்தே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ராகுல் காந்தி தன் பேச்சின் மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பொதுமக்கள், ஆதரவாளர்கள் மற்றும் பாராட்டுபவர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை இழிவுபடுத்தியுள்ளார்.
காந்தியை ஆர்எஸ்எஸ் கொலை செய்ததாக அவர் கூறுவது நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. இது கிரிமினல் குற்றமாகும். எனவே, ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இம்மனு மீது பிவாண்டி நீதிமன்றம் 27ம் திகதி விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

இலங்கைச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஜோதிடம்

மரண அறிவித்தல்கள்

பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986
பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986

அவுஸ்திரேலியா,நியுஸிலாந்து செய்திகள்

கவிதைகள்

சினிமா செய்திகள்

இந்தியச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

தொழில்நுட்பச் செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

 

glowlinknews Copyright 2013 . .