நியூசிலாந்துக்கு எதிரான டுவென்டி–20 உலக கிண்ண பயிற்சி போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
வங்கதேசத்தில் 5வது டுவென்டி–20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடக்கிறது, பதுல்லாவில் நேற்று நடந்த பயிற்சி போட்டியில் அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின.
டொஸ் வென்ற அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
அவுஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அதிரடியாக ஆடிய வார்னர், 20வது பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஆரோன் பின்ச், பவுண்டரிகளாக விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 113 ஓட்டங்கள் சேர்த்த போது, வார்னர்(65), பின்ச்(47) ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ முறையில் ‘பெவிலியன்’ திரும்பினர்.
பெய்லியும், ஹாட்ஜீம் ஓரளவுக்கு கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்கள் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு வில்லியம்சன்(17) ஏமாற்றினார், அணித்தலைவர் பிரண்டன் மெக்கலம்(37) நிலைக்கவில்லை.
நியூசிலாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டன. நாதன் கூல்டர்–நைல் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் நீஷாம்(2) அவுட்டானார். மூன்றாவது பந்தில் தேவ்சிச் (3) ‘ரன்–அவுட்’ ஆனார், முடிவில் 9 விக்கெட்டுக்கு 197 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.


0 Comments:
Post a Comment