அப்பிள் நிறுவனத்தின் இரு பட்டய உரிமைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்படும் சம்சுங் நிறுவனம், சுமார் 120 மில்லியன் டொலரை இழப்பீடாக செலுத்த வேண்டுமென அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான பலத்த போட்டியுடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகளில் ஒன்றாகும். வழக்கின் தீர்ப்பை கலிபோர்ணிய நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
தமது ஸ்மார்ட்போன்களில் உள்ள ஐந்து அம்சங்களுடன் தொடர்புடைய பட்டய உரிமைகளை சம்சுங் நிறுவனம் மீறியதாக குற்றஞ்சாட்டிய அப்பிள் நிறுவனம், 2.2 பில்லியன் டொலர் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடுத்திருந்தது.
தான் தவறிழைக்கவில்லையென வாதாடிய சம்சுங் நிறுவனம், தமது ஸ்மார்ட்போன்களுடன் தொடர்புடைய கமரா பயன்பாடு, வீடியோ தொடர்பாடல் வசதிகள் சார்ந்த இரு பட்டய உரிமைகளை மீறியதாக அப்பிள் மீது குற்றஞ்சாட்டியது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அப்பிள் நிறுவனமும் 158,000 டொலர்களை இழப்பீடாக செலுத்த வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது.
0 Comments:
Post a Comment