பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் காதலியுடன் ஜோடியாக, பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்கிறார்.
பிரிட்டனின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் சார்ல்ஸ்- டயனாவின் மூத்த மகன் வில்லியம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேத் மிடில்டனை காதலித்து கரம் பிடித்தார்.
இவரது இளைய மகன் ஹாரி(வயது 29), இராணுவத்தில் பணியாற்றி தற்போது விலகியுள்ளார்.
ஹாரியும், கிரசிடா போனாஸ்(வயது 25) என்ற பெண்ணும் காதலித்து வருவதாக அந்நாட்டு பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இருவரும் இணைந்து அடிக்கடி பொது விழாக்களில் கலந்து கொள்வது, அவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில், இந்த காதல் ஜோடி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


0 Comments:
Post a Comment