.

.

Sunday, March 16, 2014

மலேசிய விமானத்தை கடத்திய விமானி! அதிர்ச்சித் தகவல்


கடந்த 7ம் திகதி இரவு காணாமல் போன மலேசிய விமானத்தை, அதை இயக்கிய இரு விமானிகளில் ஒருவரான கேப்டன் ஜஹாரி அகமது ஷா கடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானம் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மீதான விசாரணையில் குறிப்பிட்ட அந்த விமானி கலந்து கொண்டதாக மலேசிய அதிகாரிகள் கருதுகின்றனர்.
நேற்று தலைநகர் கோலாலம்பூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து விமானத்தை கட்டுப்படுத்த பயன்படும் சைமுலேட்டர் என்ற கருவியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதைக் கொண்டு விமானத்தை எப்படி காணாமல் போகவைப்பது என பயிற்சி எடுத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
விமானத்தை கண்டறியும் முயற்சியில் 25 நாடுகள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானத்தை அதன் சுற்றுப் பாதையிலிருந்து மாற்றி அந்தமான் கடற்பகுதியில் பறக்கும் வகையில் ஜஹாரி செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் அந்த விமானத்தை எங்காவது மறைவிடத்தில் தரையிறக்கி இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளதால் அந்நாட்டு அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த விமானம் காணாமல் போய், ஒன்பது நாட்கள் ஆகியும் இதுவரை விமானம் தொடர்பான சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

இலங்கைச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஜோதிடம்

மரண அறிவித்தல்கள்

பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986
பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986

அவுஸ்திரேலியா,நியுஸிலாந்து செய்திகள்

கவிதைகள்

சினிமா செய்திகள்

இந்தியச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

தொழில்நுட்பச் செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

 

glowlinknews Copyright 2013 . .