.

.

Thursday, March 20, 2014

சினிமாவே பிடிக்க வில்லை – சிம்பு


நடிகர் சிம்பு சினிமாவே பிடிக்கவில்லை. அதையும் தாண்டி வேறு ஏதாவது செய்யலாம் என தோன்றுகிறது என்று தெரிவத்தார். காதல் அழிவதில்லை படம் மூலம் சிம்பு கதாநாயகனாக அறிமுகமானார். 2002–ல் இப்படம் வந்தது. மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்பட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். தற்போது வாலு, இது நம்மஆளு, வேட்டைமன்னன் படங்களில் நடித்து வருகிறார்.
sibu-jaya
காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். நயன்தாராவை காதலித்தார். அது தோல்வியில் முடிந்தது. பிறகு ஹன்சிகாவுடன் காதல் வயப்பட்டார். அதுவும் முறிந்து போனது. டி.வி. நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்று பேசிய அவர் சினிமா பிடிக்கவில்லை என்றார். அவர் கூறியதாவது:–
சினிமாவில் எல்லா விஷயங்களும் எனக்கு தெரியும். எனவே படப்பிடிப்புகளில் நடக்கும் தவறுகளை உடனே கண்டுபிடித்துவிடுவேன். தற்போது சினிமா எனக்கு பிடிக்கவில்லை. சினிமாவை தாண்டி வேறு ஏதாவது செய்யலாமா என்று யோசிக்கிறேன்.
ரஜினிசார் மாதிரி ஆக வேண்டும் என்பது என்னுடைய சிறுவயது ஆசையாக இருந்தது. ஆனால் 29 வயதுக்கு மேல் வாழ்க்கை வேறு மாதிரி இருக்கிறது. சினிமா என்ற வட்டத்துக்குள் சிக்க எனக்கு விருப்பம் இல்லை. அதில் இருந்து வெளியேற நினைக்கிறேன். சினிமாவை தாண்டி ஏதாவது செய்ய வேண்டும். பணம் பிடிக்கவில்லை. பணம் நல்லவர்களையும் கெட்டவர்கள் ஆக்குகிறது. மனிதாபிமானம் இல்லை. பொறாமை இருக்கிறது. இதற்கெல்லாம் பணம்தான் காரணம். சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசையும் எனக்கு கிடையாது.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

இலங்கைச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஜோதிடம்

மரண அறிவித்தல்கள்

பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986
பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986

அவுஸ்திரேலியா,நியுஸிலாந்து செய்திகள்

கவிதைகள்

சினிமா செய்திகள்

இந்தியச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

தொழில்நுட்பச் செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

 

glowlinknews Copyright 2013 . .