காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி மோகன் அடுத்து தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். சித்தார்த் – அமலாபால் நடிப்பில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் அடுத்து வாயை மூடி பேசவும் என்ற படத்தை துல்கர்சல்மான்- நஸ்ரியாவைக்கொண்டு இயக்கியுள்ளார். இதையடுத்து, தனுஷை நாயகனாக வைத்து இயக்க அவரிடம் ஒரு கதை சொல்லி ஓ.கே செய்திருக்கிறார்.
தற்போது வாயை மூடி பேசவும் பட ரிலீசுக்குத்தயாராகி விட்டதால், தனுஷ் நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க்கில் ஈடுபட்டிருப்பவர், இதர நடிகர்- நடிகைகளை ஒப்பந்தம் செய்வதிலும் கவனத்தை திருப்பியிருக்கிறார். இந்த நிலையில், படத்தில் பிரபல நடிகை ஒருவரைத்தான் தனுசுக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்த பாலாஜிமோகன், சில நடிகைகளிடம் பேசிவிட்டு கடைசியாக காஜல்அகர்வாலை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
கதையைக் கேட்டு விட்டு டபுள் ஓ.கே சொன்ன காஜல், இறுதியாக கதாநாயகனை தூக்கி விடுங்கள் என்று அவருக்கு பலத்த ஷாக் கொடுத்தாராம்.. அதோடு, என் கால்சீட் வேண்டுமென்றால் தனுஷை தூக்கித்தான் ஆக வேண்டும். காரணம், நானும், அவரும் நடித்தால் அக்கா, தம்பி போல் இருப்போம். ஜோடி பொருத்தம் செட்டே ஆகாது என்றாராம் காஜல். அதையடுத்து, எந்த பதிலும் சொல்லாமல திரும்பி விட்டாராம் பாலாஜிமோகன்.
அதையடுத்து, தனுசுக்கு பொருத்தமான வேறொரு நடிகையை புக் பண்ணி விட்டு காஜலுக்கு பதில் ஷாக் கொடுக்கவும் அவர் தயாராகிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment