இந்த வாரத்தில் அமைச்சர் கோர்னர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின்; சிரேஸ்ட அமைச்சர்களுடன் அமைச்சர் கோர்னர் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது தொடர்பில் இந்த விஜயத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது.
இலங்கை மிகவும் நெருங்கிய பிராந்திய நட்பு நாடாக திகழ்கின்றது என அமைச்சர் கோர்னர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர் விவகாரங்களில் இலங்கை அளித்து வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments:
Post a Comment