.

.

Wednesday, May 1, 2013

துபாயில்பெண்கள்கழிவறைக்காட்சிகளைரகசியமாகசெல்போனில்படம்பிடித்தஇந்தியருக்குசிறை



துபாயில் பெண்கள் கழிவறைக் காட்சிகளை செல்போனில் ரகசியமாக படம் பிடித்த இந்தியருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
phone.mobile-sexதுபாயில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டின் பெண்கள் கழிவறையின் உள்ளே, சில மாதங்களுக்கு முன்னர் சென்ற பெண், கழிவறையின் உள்ளே சலவைத்தூள் டப்பாவுக்குள் இருந்த செல்போன் மணி ஒலித்ததை கேட்டு திடுக்கிட்டார்.
செல்போனை எடுத்துப் பார்த்த அவர், அதில் இதற்கு முன்னர் கழிவறையை பயன்படுத்திய 6 பெண்களின் நிர்வாணப் படப் பதிவுகள் இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
அந்த சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகியிடம் அந்த செல்போனை அவர் ஒப்படைத்து புகார் அளித்தார்.
நிர்வாகியின் விசாரணையில் அந்த செல்போன் அங்கு பணியாற்றும் ஓர் இந்தியருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்த போலீசார், துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கின் மீது நடைபெற்ற விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தால் அந்த இந்தியருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தண்டனைக்கு பிறகு அவர் துபாயில் இருந்து வெளியேற்றப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

இலங்கைச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஜோதிடம்

மரண அறிவித்தல்கள்

பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986
பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986

அவுஸ்திரேலியா,நியுஸிலாந்து செய்திகள்

கவிதைகள்

சினிமா செய்திகள்

இந்தியச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

தொழில்நுட்பச் செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

 

glowlinknews Copyright 2013 . .