மேதினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு, மலையகம் உட்பட நாடுதழுவிய ரீதியில் ஊர்வலங்களும் கூட்டங்களும் நடைபெற்றவுள்ளன.
பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பிலும்
ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு, குருணாகல் மற்றும் பதுளையிலும் ஜே.வி.பி.
கொழும்பிலும் ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளன.
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு இம்முறை கிளிநொச்சியில் மேதினக் கூட்டத்தை
நடத்துகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடமராட்சியில் கூட்டத்தை
நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி.யின் மே தினக் கூட்டம் கிளிநொச்சயில் இடம்பெறுகின்றது.
மலையகத்தில்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர்
சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்களும் மேதின பேரணிகளையும் கூட்டங்களையும்
நடத்தவுள்ளன.
0 Comments:
Post a Comment