.

.

Saturday, March 22, 2014

பால்டிக்யாவுக்கு போர் விமானங்களை அனுப்பும் பிரான்ஸ்


சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொள்ளுவது தொடர்பாக நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி போலந்து மற்றும் பால்டிக் நாடுகளுக்கான விமானக் கண்காணிப்பிற்கு 4 போர் விமானங்களை அனுப்புவதாக பிரான்ஸ் நேற்று தெரிவித்துள்ளது.
நேட்டோ நட்பு நாடுகளான எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு தற்போது விஜயம் செய்துவரும் பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் யுவெஸ் லீ டிரியன் விமான ரோந்துக்கு உதவுவதான இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
எஸ்டோனியாவின் தலைநகர் டலினில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்த விமானங்களுடன் ஒரு ஏடபிள்யுஏசி கண்காணிப்பு விமானம், ராடார் போன்றவையும் அளிக்கப்படும் என்றும் இந்த கண்காணிப்பு விமானம் நெருக்கடி மிகுந்த தளங்களின் அருகில் குறிப்பாக போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளின் அருகில் இருந்து செயல்படும் என்று பிரான்சின் அரசு அதிகாரி குறிப்பிட்டார்.
பிரான்சின் இந்த அறிவிப்பானது கிரிமியா விவகாரத்தில் ரஷ்யாவின் நடவடிக்கையைக் கூர்ந்து கண்காணித்து வரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒத்துள்ளது.
இவை மட்டுமின்றி முன்னாள் சோவியத் குடியரசிலிருந்து பிரிந்து தற்போது சுதந்திரமாக செயல்பட்டுவரும் சில நாடுகளும் ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரான்சின் இந்த விருப்பம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் எண்ணத்தையும் எதிரொலிப்பதாக அமைந்துள்ளது.
சமீபத்தில் தோன்றியுள்ள இந்த அழுத்தங்களுக்கு இடையிலும் ரஷ்யாவுக்கு இரண்டு போர்க் கப்பல்களை அளிப்பதாக பிரான்ஸ் மேற்கொண்ட மூன்று ஆண்டு ஒப்பந்தத்தினைத் தொடர இருப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
1.2 பில்லியன் யூரோக்கள் மதிப்பு கொண்ட ரஷ்யாவிற்கான நேட்டோ நாடுகளின் மிகப் பெரிய விற்பனை என்று கருதப்படும் இந்த கப்பல்களின் முதல் உற்பத்தி வரும் அக்டோபரில் ரஷ்யாவிற்கு அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகின்றது.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

இலங்கைச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஜோதிடம்

மரண அறிவித்தல்கள்

பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986
பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986

அவுஸ்திரேலியா,நியுஸிலாந்து செய்திகள்

கவிதைகள்

சினிமா செய்திகள்

இந்தியச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

தொழில்நுட்பச் செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

 

glowlinknews Copyright 2013 . .