சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் பிரபலமானவர் சூரி.
அந்தப் படத்தில் 50 பரோட்டாக்களை சளைக்காமல் வெளுத்துக் கட்டியதாலேயே அவருக்கு பரோட்டா சூரி என்று பெயர் வந்தது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, நிமிர்ந்து நில் என சூரி நடித்த சில படங்கள் வெற்றி பெற்றிருப்பதால், அவர் பக்கம் ஹீரோக்கள் மட்டுமின்றி டைரக்டர்களும் திரும்பியுள்ளனர்.
தற்போது சந்தானம் நடித்த படங்கள் ஊத்திக்கொண்டு வருவதால், சந்தானத்துக்கு அடுத்து கொமடி ரோலில் சூரிக்கு அதிக வேல்யூ இருக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக சந்தானத்தின் படக்கூலி ஹீரோக்களை விட அதிகமாக எகிறி இருப்பதும் ஒரு காரணம்.
சந்தானத்தின் கால்ஷீட் கிடைக்காதவர்கள் இப்போது சூரி பக்கம் திரும்பியுள்ளனர். இதைப் பயன்படுத்தி, தன் சம்பளத்தையும், அதிரடியாக உயர்த்தி விட்டாராம் சூரி.
வடிவேலு வீழ்ச்சியினால் தனது காமெடி கொண்டு முன்னணி கொமடியன் ஆனார் சந்தானம். இப்போது சந்தானத்தின் சிறு வீழ்ச்சியினால் முன்னணி வகிக்கிறார் சூரி.
0 Comments:
Post a Comment