.

.

Sunday, March 16, 2014

மீண்டும் ஏ.ஆருடன் இணைகிறார் தல


ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘தீனா’ படம் மூலம் இயக்குநர் அடையாளம் கொடுத்த அஜித், மீண்டும் ஏ.ஆர்.முருகதாசுடன் கைகோர்க்கப்போகிறாராம்.
1394951880
தற்போது விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும், ‘துப்பாக்கி’யின் இந்தி ரீமேக்கான ‘ஹாலிடே’ படத்தை ரிலீஸ் செய்வதிலும் மும்மரமாக இருக்கிறார் முருகதாஸ்.
இதே நேரத்தில் முருகதாஸ் தெலுங்குப் படம் இயக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அடுத்தபடம் அஜித்துடன் தான் என தெளிவாகக் கூறிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.
படத்தின் பெயர் ‘தல’ எனக் கூறப்படுகிறது. அஜித்திற்கு ‘தீனா’ படத்தில் தல என்ற பட்டப்பெயர் வைத்தது ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித் அதனை முடித்துவிட்டு ‘தல’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

இலங்கைச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஜோதிடம்

மரண அறிவித்தல்கள்

பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986
பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986

அவுஸ்திரேலியா,நியுஸிலாந்து செய்திகள்

கவிதைகள்

சினிமா செய்திகள்

இந்தியச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

தொழில்நுட்பச் செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

 

glowlinknews Copyright 2013 . .