பாம்பு பழிவாங்கியது என்ற கதை “நீயா”- “நானே வருவேன்” திரைப்படங்கள் வெளிவந்த காலங்களில் வேண்டுமென்றால் மக்கள் அதனை நம்பியிருக்கலாம். ஆனால் இன்று பல மூடநம்பிக்கைகள் ஆய்வாளர்களால் அம்பலமாக்கப்பட்டுள்ளது. அறிவியல் வளர்ந்துவிட்ட இக்காலகட்டத்தில் எமது அறிவுக்கு எட்டாத சில அமானுசிய விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக மூடநம்பிக்கைகள் எல்லாம் அமானுசியமாகவே அல்லது அறிவியலாகவோ ஆகிவிட முடியாது. சன் தொலைக்காட்சியின் நிஐம் நிகழ்ச்சியில் அண்மையில் ஒளி-ஒலி பரப்பப்பட்ட நிகழ்ச்சியே இன்று நீங்கள் வீடியோவில் காணும் காட்சிகள். எங்கோ ஓர் கிராமத்தில் ஒருவரை பாம்பு பழிவாங்கியதாக கூறப்படுகிறது. அவர் கூறும் கூற்றுக்கள் பார்ப்பவர்களை நம்பத்தான் வைக்கிறது. எனினும் பாம்பு பழிவாங்குமா என்பது பற்றி அறிவியலயாளர்கள் குறிப்பிடுகையில் இக்கூற்றுக்கு முற்றாக மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.
குறித்த இக்காணொளியினை பல தளங்கள் அப்படியே பிரசுரித்து மக்களையும் தமது மூடநம்பிக்கைக்குள் அழைத்துசெல்ல வழிகாட்டுகிறார்கள். “நாயாக துரத்திய பாம்பு” என தலைப்பிட்டதால் என்ன பயன்? நாயக்கும் பாம்புக்கும் என்ன தொடர்பு? எது எப்படியோ … இச்சம்பவம் உண்மையாக கூட இருக்கட்டும். எனினும் அறிவியல் ரீதியாக என்ன சொல்லப்படுகிறது என்பது பற்றி குறிப்பிட ஒரு சிறந்த ஊடகம் என்ற வகையில் புதியஉலகம் கடமைப்பட்டுள்ளது. இதோ பாம்புகள் அல்லது அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா? என்ற கேள்விக்கு அறிவியல் தரும் விளக்கம். இதில் எதை நம்ப வேண்டுமோ அதை நம்புங்கள்..
“அடிபட்ட பாம்பை கொல்லாமல் விட்டால், மீண்டும் வந்து கடிக்கும் என்பது மூட நம்பிக்கையாகும். பாம்புக்கு 3 அறிவு மட்டுமே உள்ளதால் ஞாபசக்தி கிடையாது. பாம்பு மனிதனிடமிருந்து வெளியேறும் வியர்வை நாற்றத்தின் மூலம் பழகும். ஆண் பாம்பு தலை முதல் வால் வரை ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கும். பெண் பாம்பிற்கு வால் பகுதியில் சிறிய மாற்றம் இருக்கும். பாம்பு முட்புதர், மறைவிடங்கள், கற்குவியல், மரக்கட்டைகள் உள்ள பகுதிகளில் தங்குகிறது. திடீரென வழிதவறி வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் வெள்ளப் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து தெளித்தால் பாம்பு வீட்டில் இருந்து வெளியேறிவிடும். பாம்பு கடிக்கு விஷக்கடி மருந்து பலன் அளிக்காது.
மாறாக அ பாம்பு கடிக்கு “ஏ.எஸ்.வி., என்ற மருந்தை உடலில் செலுத்தினால் மட்டுமே பயன் கிடைக்கும். எனவே மாணவர்கள், பொதுமக்கள் பாம்பு பற்றிய மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும். பொதுவாக ஒருவரது கனவில் வரும் பாம்பு அவரைத் துரத்துவது போல் கண்டால் அந்த நபருக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். ஏதாவது ஒரு பிரச்சனை வரும் என்றும், அதே பாம்பு அவரை கனவில் கொத்தி விட்டாலோ அல்லது அவரைத் துரத்தாமல் சாதுவாகச் சென்று விட்டாலோ பிரச்சனை இல்லை என்றும் கூறுகின்றனர்.”
0 Comments:
Post a Comment