தங்களுக்கு
பிடித்த அல்லது ராசியான எண்ணை பயன்படுத்தும் பழக்கம் சாதாரண மனிதர்களை
மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்களையும் சுற்றி வருகிறது.சர்வதேச கிரிக்கெட்
போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் மற்றும் பல நாட்டு அணிகளை சேர்ந்த
வீரர்கள் தங்களது ராசியான எண்களை டி.ஷர்ட்டில் வாங்கி பதித்துக்கொள்வது
வழக்கம்.
இந்த ராசி நம்பர்களை இப்போது ஐபிஎல் தொடரில் அணியும் உடைகளிலும் அணிந்து கொண்டு அசத்துகின்றனர் வீரர்கள்.
இந்திய அணியின் அணித்தலைவர் டோனியின் ராசி எண் 7. இதை வைத்து தற்போது
பெர்ப்யூம் கூட வந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும்
போதும் அந்த எண்ணையே பயன்படுத்துகிறார்.
இது மான்செஸ்டர் கால்பந்து அணியின் பிரபல வீரர்கள் ஜார்ஜ் பெஸ்ட், எரிக் கன்ட்டோனா, கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிந்த எண் ஆகும்.
சச்சின் 10வது எண் கொண்ட ஜெர்சியையே எப்போதும் பயன்படுத்துகிறார். இது அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா அணிந்த நம்பராகும்.
யுவராஜ்சிங் தனது பிறந்த நாளான டிசம்பர் 12ம் திகதியை ராசியான எண்ணாக கருதுகிறார். இதனால் அவர் அந்த எண்ணையே பயன்படுத்தி வருகிறார்.
பாஜ்ஜி என்று செல்லமாக அழைக்கப்படும் ஹர்பஜன்சிங் தனது பிறந்த நாளான
யூலை 3ம் திகதியை மனதில் வைத்து தனது ஜெர்சியில் 3ம் நம்பரை பதித்துள்ளார்.
காம்பீர் 5வது எண்ணை பயன்படுத்தி வருகிறார். அவர் அக்டோபர் 14ம்தேதி பிறந்தார். இதன் கூட்டுத்தொகை 5.
ரோகித் ஷர்மாவிற்கு ராசியான எண் 9 ஆகும். அவர் ஐபிஎல்லில் 45வது எண் கொண்ட ஜெர்சி அணிந்துள்ளார். இதன் கூட்டுத்தொகை 9 ஆகும்.
யூசுப்பதானுக்கு பிடித்த எண் 9 தான். ஆனால் அவருக்கு அந்த எண்
கிடைக்கவில்லை. கூட்டுத் தொகையாக வரும் 18ம் நம்பரும் கிடைக்கவில்லை,
கடைசியில் 999 என்ற நம்பரை வாங்கிக் கொண்டார்.
கிறிஸ்கெய்ல் ராசியான எண் 333. ஏனெனில் அவரது டெஸ்ட் போட்டியின் அதிக பட்ச ஸ்கோர் இது.
முரளிதரன் சர்வசேத போட்டியில் 800 விக்கெட் வீழ்த்தியதால் அந்த எண்ணையே
பயன்படுத்தி வருகிறார். மற்றொரு பெங்களூர் வீரரான விஜய் சோல் உள்ளூர்
போட்டியில் 451 ஓட்டங்கள் விளாசியதால் அந்த எண்ணை தனது ஜெர்சியில் இடம் பெற
செய்துள்ளார்.
உமேஷ் யாதவ் தனது பிறந்த வருடமான 87ம் நம்பரை பயன்படுத்துகிறார். மோர்னே
மோர்கலின் உயரம் 6 அடி 5 அங்குலம் இதை குறிக்கும் விதமாக 65வது நம்பரை
வாங்கியுள்ளார்.
ஆனால் இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக் எந்த நம்பரையும் பயன்படுத்தாமல் தனது ஜெர்சியில் அவரது பெயரை மட்டுமே பதிந்துள்ளார்.
0 Comments:
Post a Comment